மாவட்டம்

இரத்த தான முகாம்...! தொடங்கி வைத்த ஆட்சியர்...!

Malaimurasu Seithigal TV

திருவண்ணாமலை அடுத்த வேங்கிகால் பகுதியில் உள்ள ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க அமைப்பு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இரத்ததான முகாமினை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் துவக்கி வைத்தார், ரத்த தான முகாமில் பங்கேற்று ரத்த தானம் வழங்கிய நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சான்றிதழ் மற்றும் பரிசு பொருட்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கம் ஊழியர்களின் நலன்கள் மட்டுமின்றி சமூக அக்கறையுடன் இரத்ததானம், கண் தானம், உடல் உறுப்பு தானம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை கடந்து 35 ஆண்டுகளாக மேற்கொண்டு வரும் நிலையில் 36 வது சங்க அமைப்பு தின விழாவை முன்னிட்டு இன்று சங்க உறுப்பினர்கள் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பங்கேற்று ரத்த தானம் செய்தனர்.

மேலும், இந்த நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர், தமிழகத்தின் வளர்ச்சிக்கு ஊரக வளர்ச்சித் துறை மிக முக்கிய பங்கை வகித்து வரும் நிலையில் ஊரக வளர்ச்சி துறை, காவல் துறை, வருவாய்த்துறை ஆகிய மூன்று துறைகளில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் மன அழுத்தத்துடன் பணியாற்றி வருவதாகவும் அவர்களின் மன அழுத்தத்தை போக்க வரும் ஜனவரி மாதம் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்த உள்ளதாகவும், மாவட்ட ஆட்சியர் ஆகிய தானும் தினந்தோறும் ஓய்வின்றி மன அழுத்தத்துடன் பணியாற்றி வருவதால் சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கிரிவலப் பாதையில் சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், இதேபோன்று ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் நேரம் கிடைக்கும்போது மன அழுத்தத்தில் இருந்து விடுபட உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.