மாவட்டம்

பெட்டிக்கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்கள்...! அதிரடி ரோந்து நடத்திய போலீசார்...!

நத்தம் அருகே அரசு அனுமதியின்றி விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்த மதுபாட்டில்கள்

Malaimurasu Seithigal TV

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே பட்டிக்குளம் பகுதியில், வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக நத்தம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு நத்தம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியை மேற்கொண்டனர். 

அப்போது அரவக்குறிச்சி மற்றும் பட்டிக்குளம் பகுதியை சேர்ந்த மாணிக்கம் என்பவர் அவரது வீட்டில் அரசு அனுமதியின்றி, பெட்டிக்கடையில் விற்பனை செய்ய பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 2 லட்சம் மதிப்புள்ள 1407 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர். மேலும்  மாணிக்கம் என்பவரையும் கைது செய்து நத்தம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.