மாவட்டம்

சீனிவாச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ நிகழ்ச்சி...

Malaimurasu Seithigal TV

தஞ்சாவூர் | திருவிடைமருதூர் அருகே ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அவதார ஸ்தலமாக விளங்கும் சேங்கனூரில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் சுபக்கிருது ஆண்டு தை மாதத்தை முன்னிட்டு பிரம்மோற்சவம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக நேற்று சிவ்விகையில் ஸ்ரீ சக்கரபாணி சுவாமி புறப்பாடு நடைபெற்றது. பிரம்மோற்சவ நிகழ்ச்சியை முன்னிட்டு யானை, குதிரைகள், ஒட்டகம் அலங்கரிக்கப்பட்டு புடைசூழ பெருமாள் வீதியில் ஊர்வலமாக வந்தார்.

மேலும் பெண் பக்தர்கள் கோலாட்டம் ஆடியும் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.