மாவட்டம்

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு புனித தீர்த்தம் எடுத்து செல்லும் நிகழ்வு

கரூர் அருகே நடைபெற்ற குங்குமம் காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு புனித தீர்த்தம் எடுத்து செல்லப்பட்டது.

Malaimurasu Seithigal TV

கரூர் | அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொடையூர் உள்ள அருள்மிகு ஸ்ரீ குங்கும காளியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷே விழா வரும் 01.02.2023 அன்று நடைபெற உள்ளது.

முன்னதாக கும்பாபிஷேக விழா முதல் கால யாக பூஜைகளுடன் துவங்க உள்ள நிலையில் இன்று கொடுமுடி காவேரி கரையில் இருந்து புனித தீர்த்தம் கொண்டு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி கரூர் பசுபதீஸ்வரர் ஆலயத்தில் இருந்து கொடையூர் கோவில் வரை தேவராட்டம், ஒயிலாட்டம், நாதஸ்வர இசை பல்வேறு மேல தாளங்கள் முழங்க சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக நகரில் முக்கிய வீதிகள், ஜவகர் பஜார், பேருந்து நிலையம் ரவுண்டானா, திருக்காம்புலியூர் வழியாக புனித நீரை எடுத்துச் சென்றனர்.