மாவட்டம்

வீட்டிற்குள் அழையா விருந்தாளியாக வருகை தந்த முதலை ...

புவனகிரி வெள்ளாற்று கரையை கடந்து கிராமத்துக்குள் வந்த முதலை. நீண்ட நேரம் போராடி முதலையை பிடித்த வனத்துறையினர்.

Malaimurasu Seithigal TV

கடலூர் | புவனகிரி அருகே தாதம்பேட்டை கிராமத்தில் நேற்று இரவு  முதலை ஒன்று வீட்டுக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வெள்ளாற்று கரையோரம் தாதம்பேட்டை கிராமத்தில் நேற்று இரவு  கிராமத்துக்கு வந்த முதலை ஒரு வீட்டிற்கு உள்ளே நுழைந்தது.

பக்கத்து வீட்டு பெண் ஒருவர் முதலையை பார்த்து அலறி அடித்து கத்தவே அக்கம், பக்கம்  வீட்டில் உள்ளவர்கள் வந்து பார்த்த பொழுது ஓட்டு வீட்டுக்குள் முதலை ஒன்று உள்ளே இருந்தது. பிறகு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

நேரில் வந்த போலீசார் பொது மக்களை முதலை கிட்ட நெருங்காதவாறு பார்த்துக் கொண்டனர். போலீசார் உதவியுடன் வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து வனத்துறையினர் நீண்ட நேரம் போராடி கிராம மக்கள் உதவியுடன் முதலையை பிடித்தனர். 

முதலையை பிடித்த வனத்துறையினர் சிதம்பரம் அருகே வக்கரமாரி ஏரியில் விடுவித்தனர். இரவு நேரத்தில் முதலை ஒன்று வீட்டுக்குள் நுழைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.