மாவட்டம்

இராஜேந்திரசோழன் பிறந்த நாள்; ஜொலிக்கும் கங்கை கொண்ட சோழபுரம்!

Malaimurasu Seithigal TV

மாமன்னன் ராஜேந்திர சோழன் பிறந்த நாளான ஆடி திருவாதிரை நாளை அரசு விழாவாக இன்று கொண்டாட உள்ள நிலையில் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை மற்றும் இந்து சமய அறநிலை துறை சார்பில் மாமன்னர் ராஜேந்திர சோழன் பிறந்த நாளான ஆடி திருவாதிரை நட்சத்திரத்தை அரசு  விழாவாக கடந்த ஆண்டு முதல்  கொண்டாடப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து மாமன்னன் ராஜேந்திரன் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக கோயில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. பார்ப்பதற்கு அழகாக மனதை கவரும் விதத்தில் உள்ளதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ந்தனர் இதில் இன்று மங்கல இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், பரதநாட்டியம், கிராமிய நடனம், பள்ளி மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.