கடந்த இரண்டு நாட்கள் விடாமல் பெய்த கனமழை காரணமாக சென்னை புறநகர் பகுதியான திருவொற்றியூர் பகுதியில் உள்ள அண்ணா நகர் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூந்துள்ளது. அத்துடன் சேர்ந்து கழிவுநீரும் கலந்துள்ளதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
வடகிழக்கு பருவமழை தீவிரத்தன்மையைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழைக் கொட்டித் தீர்த்தது. மழையின் தாக்கம் தற்போது குறைந்திருந்தாலும், சென்னையின் பல புறநகர் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தபடியாக இருக்கிறது.
முழங்கால் அளவிற்கு மழைநீர் சூழ்ந்துள்ளதால் அத்தியாவசிய தேவைகளுக்காகவும் கழிவுநீர் கலந்த மழைநீர் தேக்கங்களைக் கடந்து செல்ல வேண்டிய நிலமை பொது மக்களுக்கு உருவாகியுள்ளது. மேலும், கழிவுநீர் தேக்கங்களால், சுகாதார சீர்கேடும் ஏற்பட வாய்ப்பிருப்பதால், பொது மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் இந்த அண்ணா நகர் பகுதியில் குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் மழைநீரைக் கடந்து செல்ல வேண்டிய அப்பாயம் இருப்பதால், பொது மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். தற்போது குழந்தைகளுக்கு பள்ளிக்ள் திறக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | வெள்ளத்தில் சூழ்ந்த நகரங்கள்... ஆரஞ்சு அலர்ட் உண்மையா?
மேலும், இங்குள்ள மின்சாரப்பெட்டிகளும் தண்ணீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், மின்சார துண்டிப்பு மற்றும் கசிவுக்கான பிரச்சனை இருக்கிறது. குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த மழைநீரானது வீடுகளுக்குள்ளும் தேங்கி இருப்பதால், இவர்களின் நிலை மோசமாக இருக்கிறது.