மாவட்டம்

சாகர் மாலா திட்டம்...! காங்கிரஸ் கண்டன ஆர்பாட்டம்...!!

Malaimurasu Seithigal TV

புதுச்சேரியில் சாகர் மாலா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி கண்டன ஆர்பாட்டத்தை நடத்தியுள்ளது.

புதுச்சேரி புதுச்சேரி மீன் பிடித்துறைமுகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் சாகர் மாலா திட்டத்தை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையேற்றார்.

அப்போது பேசிய அவர் கப்பல் போக்குவரத்தை துவக்கி மீனவர்களின் வாழ்விடங்களை அழிக்கும் செயலில் ஈடுபட்டு வரும் மத்திய மாநில அரசுகளுக்கு தனது கண்டனத்தை பதிவு செய்தார். தொடர்ந்து புதுச்சேரியில் சுற்றுலா என்ற பெயரில் மீனவர்களின் வாழும் இடத்தை மாநில அரசு ஆக்கிரமிக்க நினைப்பதாகவும் மேலும்  சரக்கு கப்பல் போக்குவரத்தை துவக்கி மீனவர்கள் வாழும் இடத்தையும், வாழ்வாதாரத்தையும் மத்திய அரசு கைப்பற்ற நினைப்பதாகவும் தெரிவித்தார். மேலும்  சாகர் மாலா திட்டத்தை கைவிடக் கோரினார். தொடர்ந்து மீனவர்களை பழங்குடி இனப் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தினார்.

இந்த போராட்டத்தில் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் சுப்ரமணியன், வைத்திலிங்கம் எம்.பி, முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட தலைவர்களும் மற்றும் 100க்கும் மேற்பட்ட மீனவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.