மாவட்டம்

ஊரடங்கை மீறி சாலையில் சுற்றியவர்களுக்கு கொரோனா பரிசோதனை !!

Malaimurasu Seithigal TV

கரூர் அருகே ஊரடங்கை மீறி சாலையில் சுற்றியர்களுக்கு மருத்துவகுழு உதவியுடன் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.  

குளித்தலை சுங்ககேட் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக தேவையின்றி வந்தவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்க்கொண்டனர்.

பரிசோதனையின் முடிவில் கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் அளித்தால் மட்டுமே இருசக்கர வாகனங்கள் திருப்பி அனுப்பபடும் என தெரிவித்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர வாகனங்கள் குளித்தலை காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.