மாவட்டம்

“நாங்களும் அப்பா கூட சேர்ந்து சாமிக்கிட்ட போறோம்” - கணவனை விட்டு பிரிந்து சென்ற மனைவி.. இரண்டு குழந்தைகளுடன் தந்தை தற்கொலை!

எனவே குழந்தைகளுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து மூன்று பேரும் உயிரிழக்க போவதாக தனது

Mahalakshmi Somasundaram

கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் உள்ள இந்திரா காந்தி நகரில் வசித்து வந்தவர் 46 வயதான ராஜா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுகன்யா என்ற பெண்ணுக்கும் திருமணமாகி 12 வயதில் குமரகுரு என்ற மகனும், 7 வயதில் தன்யாஶ்ரீ என்ற மகளும் இருந்த நிலையில் சுகன்யா மற்றும் ராஜா தங்கள் குழந்தைகளுடன் குடும்பமாக வசித்து வந்தனர். இந்த நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு குடும்ப பிரச்சனையாக மாறி கடந்த சில நாட்களுக்கு முன்பு சுகன்யா கோபித்துக் கொண்டு தனது தாயார் வீட்டிற்குச் சென்றதாக கூறப்படுகிறது.

மனைவியை பிரிந்து இருந்த ராஜா தனது இரு குழந்தைகளை பார்த்து கொண்டு தனியாக இருந்துள்ளார். மனைவியை சென்று ஒன்றை வாழ அழைத்த போதும் அவர் ராஜாவுடன் சேர்ந்து வாழ மறுப்பு தெரிவித்ததால் தனிமையில் வசித்து வந்த ராஜா விரக்தியில் இருந்துள்ளார். எனவே குழந்தைகளுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து மூன்று பேரும் உயிரிழக்க போவதாக தனது தாய், மனைவி மற்றும் நண்பர்களுக்கு “ எல்லோரும் என்னை மன்னிச்சிடுங்க நான் ஒரு படிச்ச முட்டாள், நான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை” என ராஜாவும் அவரது பிள்ளைகள் “நாங்களும் அப்பா கூட சேர்ந்து சாமிக்கிட்ட போறோம்” என whatsapp - ல் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி விட்டு ராஜா குழந்தைகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

whatsapp மெசேஜ் பார்த்த நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து வீட்டில் சென்று பார்த்த போது வீட்டின் ஹால் பகுதியில் ஒரே சேலை கயிற்றில் ராஜா, அவரது பிள்ளைகள் குமரகுரு, தன்யாஶ்ரீ ஆகிய மூன்று பேரும் தூக்கில் தொங்கிய நிலையில், ராஜாவின் நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில் மூன்றுபேரையும் தூக்கிலிருந்து சடலமாக மீட்டனர். தந்தை தனது மகள் மற்றும் மகனுடன் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பண்ருட்டி போலீசார் உயிரிழந்த மூன்று பேரில் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.