மாவட்டம்

துடப்பம் எடுத்த பெண்ணை கடித்த கண்ணாடி விரியன் பாம்பு…

Malaimurasu Seithigal TV

கடலூர் | கொண்டூர் பகுதியை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி. இன்று காலை வீட்டு வாசலை சுத்தம் செய்ய வீட்டில் இருந்த துடுப்பத்தை எடுத்த அப்பொழுது தொடப்பத்தின் மேல் அமர்ந்திருந்த கண்ணாடி விரியன் பாம்பு அவரை கடித்தது.

இதில் அவர் உடனடியாக மயக்கமடைய அவரை கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் இந்த தகவல் பாம்பு ஆர்வலர் செல்லாவிற்கு தெரிவிக்கப்பட்டது. செல்லா அந்த வீட்டிற்கு சென்று பார்த்த போது அந்த பகுதியில் இருந்த கண்ணாடி விரியன் பாம்பினை செல்லா மீட்டார்.

மேலும் இது கண்ணாடி விரியன் பாம்பு என்பதால் விஷத்தன்மை உடையது என்பதால் அந்த பெண்மணிக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிகாலை நேரங்களில் வீட்டில் வெளியில் இருக்கும் துடப்பம் போன்ற பொருட்களை எடுக்கும் பொழுது அதில் பாம்பு உள்ளிட்ட ஜந்துக்கள் உள்ளதா என்பதை பார்த்து எடுக்க வேண்டும் என்பது முக்கியமான தகவல்.