மாவட்டம்

மது கடைகளை மூடகோரி ஆர்ப்பாட்டம்...! நாம் தமிழர் கட்சியினர் கைது...!

Malaimurasu Seithigal TV

பாம்பனில் உள்ள மது கடைகளை நிரந்தரமாக மூட கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டு தீவில் பாம்பன் பகுதியில் மட்டும் மூன்று மதுபான கடைகள் தற்போது இயங்கி வருகிறது. இந்த மதுபான கடைகளில் மது வாங்குவதற்காக ராமேஸ்வரத்தில் இருந்து மது பிரியர்கள் அதிக அளவில் பாம்பன் வந்து செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

இந்த காரணத்தால் பாம்பனில் இயங்கி வரும் மூன்று மதுபான கடைகளையும் நிரந்தரமாக மூட வலியுறுத்தினர். இதனால் பாம்பன் பேருந்து நிலையத்திலிருந்து நாம் தமிழர் கட்சியினர், கண்டன கோஷங்களை எழுப்பியவாறு மது கடையின் முன்பு அமர்ந்து மதுக்கடையை திறக்க விடாமல் நிரந்தரமாக அடைக்க கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் ராமேஸ்வரம் காவல்துறை கண்காணிப்பாளர் தனஞ்ஜெயன்  பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பேச்சுவார்த்தை தோல்வியுற்ற காரணத்தால் போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நபர்கள் கைது செய்யப்பட்டனர்.