மாவட்டம்

தேவாரம் திருமுறை பாடல்கள் பயிற்சி வகுப்புகள் தொடக்கம்...

தஞ்சாவூரில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தேவாரம் திருமுறை பாடல்கள் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.

Malaimurasu Seithigal TV

தஞ்சாவூர் | தென்னகப் பண்பாட்டு மையம், இந்திய அரசு கலாச்சாரத்துறை அமைச்சகம் சார்பில் தெய்வ நெறியை இளைஞர்களிடம் ஊக்குவிக்கும் வகையில் செந்தமிழ் தேவாரம் திருமுறை பாடல்கள் பயிற்சி வகுப்பு தஞ்சையை அடுத்த கரந்தை தமிழ்ச் சங்க வளாகத்தில் நடைபெற்றது,

பயிற்சி தொடக்க விழாவில் தென்னகப் பண்பாட்டு மையத்தின் நிர்வாக அலுவலர் சீனிவாசன், கரந்தை தமிழ் சங்க செயலாளர் சுந்தரவதனம், கரந்தை உமாமகேஸ்வரனார் கலைக்கல்லூரி முதல்வர் திருமதி ராஜாமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டு குத்து விளக்கேற்றி வாழ்த்துரை வழங்கி  தொடங்கி வைத்தனர்.

மேலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தேவார திருவாச புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. இந்தப் பயிற்சி வகுப்புகள்  தென்னக பண்பாட்டு மையம் சார்பில் இலவசமாக மாதந்தோறும் முதல் மற்றும் மூன்றாம் வாரங்களில் சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களில் தொடர்ச்சியாக நடைபெறும்.

இப்பயிற்சி வகுப்பில் திருமுறை ஓதுவார் சிவனேசன் அவர்களால் திருமுறை பாடல்கள் பயிற்சி பயிற்றுவிக்கப்பட்டது, இந்நிகழ்ச்சியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.