திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்துமேடு இந்திரா நகரை சேர்ந்தவர் 46 வயதுடைய ராஜா. இவர் அதே பகுதியில் மெக்கானிக் கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கும் பக்கத்துக்கு ஊரை சேர்ந்த 40 வயதுடைய ஆர்த்தி என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன் திருமணமான நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன் பக்க ஜன்னல் வழியாக விபூதி அதிக அளவில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த ஆர்த்தி அவரது கணவர் ராஜவிடம் தகவல் தெரிவித்து வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளை பாருங்கள் என்று கூறியுள்ளார். எனவே ராஜா சிசிடிவி காட்சிகளை பார்த்தபோது வீட்டின் ஜன்னல் வழியாக பெண் ஒருவர் விபூதி வீசி செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். விபூதி வீசிய பெண் அதே பகுதியை சேர்ந்த 52 வயதுடைய ராஜாமணி என்பது தெரிவந்துள்ளது. ராஜாமணி தனது கணவரை இழந்த நிலையில் ராஜா வீட்டில் அடிக்கடி அடிக்கடி உணவு அருந்துவது கார்த்தியுடன் சிறு சிறு வேலைகளை பகிர்ந்து கொள்ளவது என ராஜா இருப்பவர்களுடன் நன்கு பழகி வந்துள்ளார்.
விபூதி உள்ள இடங்களில் வீட்டை சுத்தம் செய்யும் போது வீட்டுக்குள் குட்டிச்சாத்தான் பொம்மையை இருப்பதை கண்டு குடும்பமே அதிர்ச்சி அடைந்தது. பின்பு அந்தப் பெண்ணை அழைத்து ராஜா கேட்டதில் அதே பகுதியை சேர்ந்த பூக்கடை வைத்திருக்கும் மணி என்பவர் “எனக்கும் ராஜாவிற்கும் முன் பகை உள்ளது அதனால் அவரை பழிவாங்க நீ உதவ வேண்டும்” என்று ராஜாமணிடம் கூறியுள்ளார்.
கடந்த 20 நாட்களாக ராஜா வீட்டில் திருநீறு பில்லி சூனியம் வைக்க வேண்டும் இல்லை என்றால் கொலை செய்து விடுவேன் என்று பூக்கடை மணி, ராஜாமணியை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்தப் பெண் திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சம்பவம் நடந்து ஒரு வார காலமாகியும் போதிய ஆதாரங்கள் இருந்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
மணிக்கு ராஜாவிற்கு கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்து வந்ததால் மணி ராஜாவை பழிவாங்க இவ்வரசு செய்துள்ளதாகவும். மேலும் ஏற்கனவே மணியின் மகளை ராஜா தகாத வார்த்தைகளால் பேசிய நிலையில் மணி ராஜா மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதிலிருந்து தப்பிக்க ராஜாவே இது போல நடமாடுவதாகம் சொல்லப்படுகிறது. எனவே போலீசார் இரண்டு கண்ணோட்டத்திலும் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.