மாவட்டம்

12வகுப்பு தேர்ச்சி பெற்ற நரிக்குறவர் சமூக மாணவர்..! மாவட்ட ஆட்சியர் பாராட்டு...!!

Malaimurasu Seithigal TV

நரிக்குறவர் சமூகத்தில் முதன்முதலாக 12வகுப்பு படித்து தேர்ச்சி பெற்று பெருமை சேர்த்த மாணவருக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

சிவகங்கையில் உள்ள பழமலை நகரில் 200க்கும் மேற்பட்ட நரிக்குற சமூகத்தினர் பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் பாசிகள் மணிகள் விற்பனை செய்யும் தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். கல்வி அறிவு பெறாத இவர்களுடைய குழந்தைகள் தற்போது பள்ளியில் படித்து வருகின்றனர்.

இந்த பழமலை நகரை சேர்ந்த ஜெயபாண்டி என்பவரின் மகன் தங்கப்பாண்டி என்பவர் இந்த சமூகத்திற்கு எடுத்துக்காட்டாக இந்தப் பகுதியிலேயே முதன் முதலாக பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 438 மார்க் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி மாணவர் தங்கபாண்டி மற்றும் அவருடைய குடும்பத்தினரை வரவழைத்து அவர்களை பாராட்டிய மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி மாணவருக்கு கேக் ஊட்டி மகிழ்வித்தார். மேலும் மாணவரின் மேல் படிப்புக்கு உதவுவதாகவும் மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.