மாவட்டம்

பேருந்து பற்றாக்குறை காரணமாக பல மணி நேரம் சொந்த ஊருக்கு பயணித்த மக்கள்...

சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்துகள் பற்றாக்குறை காரணமாக நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து பயணித்தனர்.

Malaimurasu Seithigal TV

தை திருநாளான பொங்கலுக்காக பொது மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு போவது வழக்கம். அதுவும் இரடு ஆண்டுகள் கொரோனா காரணமாக கட்டுப்பாடுகள் தாண்டி சென்னை போன்ற மாநகரில் இருந்து தங்களது சொந்த ஊருக்கு செல்லும் மக்கள், ரயிலை விட பேருந்துகளையே பயணிக்க தேர்ந்தெடுப்பர்.

அந்த வகையில், சென்னையில் வசிக்கும் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல தமிழக அரசு சார்பில் மாதவரம், கே.கே.நகர், தாம்பரம் மெப்ஸ், தாம்பரம், பூந்தமல்லி, கோயம்பேடு ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து இரண்டாவது நாளாக நேற்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. 

இந்நிலையில், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பெரும்பாலான பகுதிகளுக்கு பேருந்துகள் சரியாக இயக்கப்பட்ட சூழலில் நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், வேளாங்கண்ணி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் மட்டும் பேருந்துகள் பற்றாக்குறை காரணமாக சுமார் நீண்ட நேரமாக பயணிகள் காத்திருந்தனர். குறிப்பாக இதில், ஊருக்கு தனியாக செல்லும் பெண்கள், கைக்குழந்தையுடன் பெண்களும், முதியோர்களும் காத்திருந்தனர்.

இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, மற்ற பேருந்து நிலையங்களுக்கு செல்ல வேண்டிய பயணிகளும் இங்கு வந்துள்ளதால் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கூடுதல் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்தனர்.