ஈரோடு மாவட் டம் கோபி அருகே உள்ள அரசூர் இண்டியம்பாளையம் சின்னகரட்டையை சேர்ந்த வர் பிரியதர்ஷினி (19). இவர் கடந்த 7 மாதங்களுக்கு முன் சத்திய மங்கலம் அருகே உள்ள புதுக்கொத்துகாட்டை பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி சக்திவேல் (23) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
நேற்று முன்தினம் இரவு அரசூர் அருகே குள்ளம்பாளையத்தில் மாரியம்மன் கோயில் திருவிழாவுக்கு இருவரும் சின்னகரட்டில் உள்ள பிரிய தர்ஷினியின் பெற்றோர் வீட் டிற்கு வந்தனர்.
அப்போது, அவர்களுக்குள் குடும்பத் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் இருவரும் ஒன்றாக சேர்ந்த்து வாழ்வது தொடர்பாக சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த சண்டையில் மனமுடைந்த பிரியதர்ஷினி, சின்னகரட்டில் விவசாய கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார், இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக்திவேலுவும் அதே கிணற்றில் குதித்து அவரை காப்பாற்ற முயற்சித்துள்ளார். ஆனால் நீரில் மூழ்கி மூச்சி திணறி உயிரிழந்தனர்.
தகவலறிந்து நேற்று காலை கடத்தூர் போலீசார், தீயணைப்புத் துறை வீரர்கள் உதவியுடன் இருவரது சடலத்தையும் மீட்டனர்.
கணவன் மனைவி ஒரே கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்