மாவட்டம்

தேர்வில் தோல்வி.. வாழ்க்கையை முடித்து கொண்ட மாணவி...!!

Malaimurasu Seithigal TV

உத்திரமேரூர் அருகே பதினோராம் வகுப்பு தேர்வில் தோல்வியுற்ற மாணவி தற்கொலைக்கு முயன்று சிகிச்சை பெற்று வந்து நிலையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எடமச்சி கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி என்பவரது இரண்டாவது மகள் சூர்யா வயது 16.  இவர் சாலவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு பயின்று வந்தார். பொதுத்தேர்வு முடிந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியானது.

இதில் சூர்யா மூன்று பாடப்பிரிவுகளில் தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது.  இதனால் மனமுடைந்து போன மாணவி சூர்யா வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்ட அவரது உறவினர்கள் மற்றும் குடும்பத்தார் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை சூர்யா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து சாலவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.