மாவட்டம்

என்.எல்.சி நிறுவனத்துக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய விவசாயிகள்...!

Malaimurasu Seithigal TV

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி இந்தியா லிமிடெட் நிறுவனம் உள்ளது. இந்த நிலையில் சுரங்கம் 1, சுரங்கம் 1 விரிவாக்கம், சுரங்கம் 2 என மூன்று நிலக்கரி சுரங்கம் மூலம் நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

என்.எல்.சி சுரங்கநீரை அங்கு உள்ள சுற்றுவட்டார கிராமங்களுக்கு வாய்க்கால் மூலம் உபரி நீர் அனுப்பப்பட்டு வந்தது. இந்த நிலையில் என்.எல்.சி சுரங்கம் 2-ல் உள்ள ஆறு கொண்ட ஓடை, கருவமடை ஓடை ஆகியவற்றை என்எல்சி நிறுவனம் ஆக்கிரமித்துக் கொண்டு மேலகொளக்குடி, கருங்குழி மக்களுக்கு நீர் செல்ல முடியாமல் பம்பு மூலம் என்.எல்.சி நிறுவனம் உபரி நீரை வெளியேற்றியது. இதன் மூலம் விவசாயிகள் இரண்டு போகம் விவசாயம் செய்து வந்தனர்.

இந்த நிலையில் ஒரு வருடமாக என்.எல்.சி நிறுவனம் விவசாயத்திற்கு சுரங்க உபரி நீரை வெளியேற்றாமல் நேரடியாக கடலுக்கு அனுப்புக்கிறது. இதனால் இப்பகுதியில் உள்ள 450 ஹெக்டர் விவசாயிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து என்.எல்.சி நிறுவனத்திடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் என்.எல்.சி நிறுவனத்தை கண்டித்தும், சுரங்க உபரிநீரை விவசாயத்திற்கு விட கோரியும் இன்று என்.எல்.சி சுரங்கம் இரண்டு எதிரே அப்பகுதி மக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.