கூத்தாநல்லூரில் மாநில செயலாளர் அல் அமீன் பேட்டி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் அமைப்பின் சார்பில் திருச்சியில் பித் அத் -ஒழிப்பு மற்றும் சமுதாய பாதுகாப்பு மாநாட்டை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் கூத்தாநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் அமைப்பின் மாநில செயலாளர்கள் தாவூத் கைசர் , அல் அமீன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்டம் முழுவதிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கலந்து பலர் கொண்டனர் அதனை தொடா்ந்து மாநில செயலாளர் அல் அமீன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போதுபித்அத் ஒழிப்பு மாநாடு- 2023 பிப்ரவரி 5 ம் தேதி திருச்சியில் நடைபெற உள்ளது.
தமிழகம் முழுவதும் பல்லாயிரகணக்கான இஸ்லாமியர்கள் பங்குபெறுகின்றனர் . மத்திய பாஜக அரசாங்கம் தொடர்ந்து இஸ்லாமிய சமுதாயத்திற்கு எதிராக ஏராளமான பிரச்சனைகளை கொடுத்து வருகிறது. உதாரணத்திற்கு பொது சிவில் சட்டம் , இஸ்லாமிய பெண்கள் அணியும் ஹிஜாபை எதிர்ப்பது அதேபோல் கலால் இறைச்சியை தடை செய்வது உள்ளிட்ட பிரச்சனைகளை ஒன்றிய அரசு பால்வேறு மாநில அரசுகளிடம் கொண்டு வருகிறது இதனை எதிர்த்து.பித் அத் -ஒழிப்பு மற்றும் சமுதாய பாதுகாப்பு மாநாடு அமையும் தமிழக அரசாங்கம் இஸ்லாமியர்களுக்கு அதிக இட ஒதுக்கீடு பெற்று தர வேண்டும் தற்போது அரசு வேலைவாய்ப்புகளில் இஸ்லாமியர்களுடைய பங்கீட்டை வெளிபடுத்த கூடிய வகையில்வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தெரிவித்தார்