மாவட்டம்

மின் கம்பியில் ஏற்பட்ட மின் கசிவால் தீ விபத்து...! இருசக்கர வாகனங்கள் சேதம்...!

Malaimurasu Seithigal TV

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மூக்குடி கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி (37). இவர் அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள சாலையில் இரு சக்கர வாகனம் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் வேலையை முடித்துக் கொண்டு,கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். 

இந்நிலையில் இன்று அதிகாலை திடீரென கடையின் மேற்கூரைக்கு மேலே செல்லும் மின் கம்பியில் மின் கசிவு ஏற்பட்டு கடையில் தீப்பற்றி எரிந்துள்ளது. இதில் கடையில் பழுது பார்ப்பதற்க்காக வைக்கப்பட்டிருந்த 2 லட்சம் மதிப்பிலான 15ற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் கடை முழுவதும் தீயில் எரிந்து சேதமாகியுள்ளது. இது குறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த  தீயணைப்புத்துறையினர் மற்ற கடைகளுக்கு தீ பரவாதவாறு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். சம்பவம் குறித்து அறந்தாங்கி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி வளாகம் அருகே இரு சக்கர வாகனம் பழுது பார்க்கும் கடையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.