மாவட்டம்

பாலாற்றில் மீன்பிடித்த தமிழக மீனவர் மீது துப்பாக்கிச் சூடு...

ஈரோடு அருகே கர்நாடக வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Malaimurasu Seithigal TV

தமிழகம் மற்றும் கர்நாடக எல்லை பகுதியில் பாலாறு சென்று கொண்டுள்ளது. இந்த பாலாற்றில் சேலம் கோவிந்தபாடியை சேர்ந்த மீனவர்கள் சிலர் அவ்வப்போது சென்று மீன் பிடிப்பது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த செவ்வாய் கிழமை  ராஜா மற்றும் அவருடைய நண்பர்கள் சிலர் அந்த பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் கர்நாடக வனத்துறையினர் அவர்கள் மான் வேட்டைக்கு வந்ததாக கருதி அவர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர்.

இந்த துப்பாக்கிசூடு நடைபெற்றவுடன் அவர்கள் அனைவரும் அங்கிருந்து ஓடி தப்பித்த நிலையில் ராஜா மாயமானார். இதனை அடுத்து ராஜா பாலாற்றில் விழுந்திருக்கலாம், அல்லது துப்பாக்கிசூட்டில் இறந்திருக்கலாம் என தேடி வந்த நிலையில் தற்போது ராஜாவின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு - கர்நாடகா எல்லையில் உள்ள பாலாற்றில் மிதந்த மீனவர் ராஜாவின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீனவர் உடல் கண்டெடுப்பால் தமிழ்நாடு - கர்நாடக எல்லையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

இதனை அடுத்து தமிழ்நாடு - கர்நாடக எல்லை பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருவதால்  இரு மாநில எல்லையில் போக்குவரத்து  நிறுத்தப்பட்டுள்ளது.