மாவட்டம்

நிவாரண நிதியில் இருந்து 2 லட்சம்... முதலமைச்சர் உத்தரவு..

முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Malaimurasu Seithigal TV

இந்திய கடற்படையினரால் சுடப்பட்ட தமிழக மீனவருக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கோடியக்கரை பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, இந்திய கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில்,  மயிலாடுதுறையைச் சேர்ந்த மீனவர் வீரவேல் படுகாயம் அடைந்தார்.

இவருக்கு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவரும் நிலையில், அமைச்சர்கள், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் மூர்த்தி ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

இந்நிலையில், இந்திய கடற்படையினரால் சுடப்பட்ட தமிழக மீனவருக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் காயமடைந்த மீனவர் வீரவேலுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.