மாவட்டம்

கல்விக் கழக இடத்தில்...வணிக வளாகமா?...ஃபார்வர்டு ப்ளாக் போராட்டம்!

Malaimurasu Seithigal TV

கள்ளர் கல்விக் கழகத்திற்கு சொந்தமான இடத்தில் வணிக வளாகம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் சாலையில் உள்ள கள்ளர் கல்விக் கழகத்திற்கு சொந்தமான இடத்தில், கள்ளர் கல்விக் கழகத் தலைவர் அனுமதியுடன் வாணிகம் வளாகம் கட்டி வருகின்றனர்.வணிக வளாகம் கட்டுவதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் மற்றும் வழக்கறிஞர்கள் வணிக வளாகம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்குரைஞர் சுரேந்திரன் தலைமையில் வழக்குரைஞர்களும் எல். எஸ்.இளங்கோவன் தலைமையில் அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியினரும் கலந்து கொண்டனர்.