மாவட்டம்

மேஸ்த்ரி முதல் மெக்கானிக் வரை... பூட்டுடைத்து 25 சவரன் தங்கம் திருட்டு...

மேஸ்த்ரி முதல் இரு சக்கர வாகனம் பழுது பார்ப்பவர்கள் வரை அனைவரது வீடுகளின் பூட்டையும் உடைத்து 25 சவரன் தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

Malaimurasu Seithigal TV

திருப்பத்தூர் | ஆம்பூர் அடுத்த தோட்டாளம் கொல்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் தனசேகர். இவர் வேலூரில் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு குடும்பத்துடன் உறவினர் நிகழ்ச்சிக்கு சென்று வீடு திரும்பிய போது அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 15 சவரன் நகை மற்றும் 3 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.

அதேபோல் அதே பகுதியைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி வெங்கடேசன் என்பவர் குடும்பத்துடன் தங்கி சென்னையில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் யாரும் இல்லாத வீடுகளை நோட்டமிட்டு நுழைந்த கொள்ளையர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து அறையில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 10 சவரன் நகை மற்றும் பணம் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இது குறித்து தனசேகர் மற்றும் வெங்கடேசன் இருவரும் அளித்த புகாரின் பேரில்  ஆம்பூர் கிராமிய போலீசார் மற்றும் கைரேகை நிபுணர் பாரி உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று தடயங்கள் சேகரிக்கபட்டு கொள்ளை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆம்பூர் அருகே அடுத்தடுத்து கட்டிட மேஸ்திரி மற்றும் இருசக்கர வாகனம் பழுதுபார்க்கும் கடை உரிமையாளர் வீடுகளின் பூட்டை உடைத்து 25 சவரன் நகை மற்றும் பணம் கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.