மாவட்டம்

போக்குவரத்து காவலரை முற்றுகையிட்ட பொதுமக்கள் ... செஞ்சியில் பரபரப்பு...

தனியார் பேருந்து ஓட்டுனரை தாக்கிய போக்குவரத்துக் காவலரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதனால் செஞ்சியில் பெரும் பரபரப்பு நிலவியுள்ளது.

Malaimurasu Seithigal TV

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி நான்கு முனை சந்திப்பில் தனியார் பேருந்து ஓட்டுனர் ராஜி என்பவரை தாக்கிய போக்குவரத்து காவலர் மணிகண்டனை முற்றுகையிட்டு பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரப்பரப்பு நிலவியது.

செஞ்சி நான்கு முனை சந்திப்பில் போக்குவரத்து சீரமைப்பில் ஈடுபட்டிருந்த காவலர் மணிகண்டன் பேருந்து எடுக்க சொல்லி பேசிக் கொண்டிருந்தபோது கோபமடைந்து ஓட்டுனரை திடீரென தாக்கியுள்ளார்.

இந்நிலையில், நிலைகுலைந்து போன பேருந்து ஓட்டுனருக்கு ஆதரவாக அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் போக்குவரத்து காவலரை முற்றுகையிட்டு தாக்கியதற்கான காரணத்தை கேட்டு வாக்குவாதத்தில்  ஈடுபட்டனர்.

இதனால் தால் பெரும் பரபரப்பு நிலவியது. மேலும், அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு  ஏற்பட்டது. தொடர்ந்து போக்குவரத்து காவலர் பொதுமக்களிடம் இதே போன்று பிரச்சினையில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.