தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று சட்டப்பேரவையில் உரையாற்றினார். அப்போது தலைவர்கள் பெயர், திராவிட மாடல் உள்ளிட்ட ஏராளமான வார்த்தைகளை நீக்கிவிட்டு படித்தார்.
இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னையில் “GET OUT RAVI” என போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஆதரவு தெரிவித்து புதுக்கோட்டை நகர் முழுவதும் ஆளுநரின் ஆளுமையே என போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
ஆளுநருக்கும், ஆளும் கட்சியினருக்கும் இடையே கட்சி மோதல் உச்சத்தை அடைந்துள்ள நிலையில் திமுக- பாஜக இடையே போஸ்டர் யுத்தம் நடைபெற்று வருகிறது.
மேலும் படிக்க | போராட்டத்தில் குதித்த பெரியார் திராவிடர் கழகத்தினர்...ஆளுநருக்கு எதிராக வலுக்கும் போராட்டம்...!