மாவட்டம்

ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட பட்டதாரி இளைஞர்...! கைது செய்த போலீசார்...!

Malaimurasu Seithigal TV

திண்டிவனத்தின் பல்வேறு பகுதிகளில் ஆன்லைன் லாட்டரி  விற்பனை செய்யப்பட்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 
ஸ்ரீ நாதாவிற்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில்,  திண்டிவனம் ஏ.எஸ்.பி அபிஷேக் குப்தா மேற்பார்வையில் தனிப்படை குழு அமைக்கப்பட்டு லாட்டரி விற்பனையில் ஈடுபடுபவர்களை வலைவீசி தேடி வந்தனர். 

இந்நிலையில் இன்று திண்டிவனம் செஞ்சி பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்த போது, அவர் அய்யந் தோப்பு பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவரது மகன் செந்தில்குமார் (22) என்பதும், அவர் திண்டிவனம் பகுதிகளில் தொடர்ந்து ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்தது. அவரிடமிருந்து இரு சக்கர வாகனம் மற்றும் 3 செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து மேலும் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் திண்டிவனம் பகுதிகளில் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டு வரும் பலரும் போலீசாரிடம் பிடிபடுவார்கள் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.