தேனி அருகே குன்னூர் ரயில்வே மேம்பாலம் அருகில் காதல் ஜோடி நேற்று இரவு ரயில் தண்டவாளங்களில் படுத்து போடியில் இருந்து சென்னை நோக்கி சென்ற அதிவிரவு ரயில் ஏறி தற்கொலை செய்து கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த மணிகண்டன் (35) என்பவருக்கு திருமணம் ஆகிய நிலையில் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த சம்யுக்தா (21) என்ற பெண்ணுடன் திருமணத்திற்கு மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மணிகண்டன் மற்றும் சமியுத்தா இருவரும் வீட்டை விட்டு வெளியேறி இருசக்கர வாகனம் மூலம் தேனியில் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று நேற்று இரவு 9 மணிக்கு மேல் ரயில் வரும் நேரத்தை அறிந்து குன்னூர் அருகே பைக்கை நிறுத்திவிட்டு தற்கொலை செய்யும் நோக்கத்தில் ரயில் தண்டவாளத்தில் படுத்திருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது போடிநாயக்கனூரில் இருந்து சென்னை நோக்கி செல்லும் விரைவு ரயில் மோதி உடல் நசுங்கி துண்டு துண்டாகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து உயிரிழந்த உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இன்று காலை ரயில்வே போலீசார் தண்டவாண்டவாளத்தில் சிதறிக் கிடந்த உடல்களை கைப்பற்றி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருமணத்திற்கு மீறிய உறவால் இரண்டு இளம் ஜோடிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்