மாவட்டம்

" தனித்தீவு மக்களை போல் கொடுமை படுத்துவது கண்டனத்துக்குரியது.." - சட்டமன்ற உறுப்பினர் செல்வப் பெருந்தகை

Malaimurasu Seithigal TV

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பது தொடர்பாக நேற்று தமிழக அமைச்சர்களை ஏகனாபுரம் மற்றும் 12 கிராம மக்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர். அமைச்சர்கள் பொது மக்களின் கோரிக்கையை முதலமைச்சரிடம் கொண்டு சென்று நல்ல முடிவு கூறுவதாக கூறி, பின்னர் வரும் 17ஆம் தேதி சட்ட மன்றத்தை நோக்கி நடைபயண போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக முடிவெடுக்கப்பட்டது.

மேலும், நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வப் பெருந்தகை ஏகனாபுரம் பகுதி மக்களுடன் கலந்துரையாடினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஏகானாபுரம் மக்களுக்காக வரும் சட்டமன்ற கூட்டத்தில் தனி தீர்மானம் இயற்றி விவாதிக்கப்படும். அவர்களை தனித்தீவு மக்களைப் போல் சித்தரித்து காவல்துறையினர் கொடுமையாக நடந்து கொள்ளும் விதம் கண்டனத்துக்குரியது. தனது தொகுதிக்குள் செல்ல தன்னையே காவல்துறையினர் அனுமதி வாங்க வேண்டும் என்று கேட்கின்றனர். தனது தொகுதியில் உள்ள பகுதிக்கு தான் செல்ல யாரிடமும் அனுமதி வாங்க வேண்டிய அவசியம் இல்லை. ஆகவே காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை, ஏகனாபுரம் பகுதிகளில் அமைத்துள்ள தடுப்புகளையும் போலீஸ் பூத்தையும் உடனே அகற்ற வேண்டும். காவல்துறையினர் தடுப்பு வைத்து ஏகனாபுரம் மக்களை சித்தரவதை செய்கின்றனர். இது தமிழக அரசை அவமதிக்கும் செயல் என பேசியுள்ளார்.