மாவட்டம்

"உங்கள் மனிதாபிமானத்தின் மீது சந்தேகம் எழுகிறது" ராகவா லாரன்ஸின் பேச்சிக்கு கட்டமான பதிலடி கொடுத்த இயக்குநர் சேரன்! வாக்களித்த மக்கள் தெருநாய்களா?

அரசியலுக்கு வருகிறேன் என்றும் மக்களின் கருத்தினை குறித்தும் கேட்டிருந்தார். இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்தார் ராகவா லாரன்ஸ்.

Vinvizhi Leninton

சமீபத்தில், ராகவா லாரன்ஸ் அரசியலுக்கு வரவிருக்கிறார் என்ற அறிவிப்பு வெளியாகியது. தனது X தளத்தில் வீடியோவாக பதிவிட்டு தான் ஏன் அரசியலுக்கு வருகிறேன்? என்றும் இதற்கு முன்பு இருந்த நிலைப்பாட்டினையும் குறித்து மனம் திறந்து பேசிய லாரன்ஸ், தானும் தற்போது அரசியலுக்கு வருகிறேன் என்றும் மக்களின் கருத்தினை குறித்தும் கேட்டிருந்தார். இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்தார் ராகவா லாரன்ஸ்.

சாலையில் இருக்கும் தெரு நாய்கூட நம்ம பாரதியால் கத்தும். யார் இந்த புது ஆள் என்று. அந்த தெருநாய்க்கு பிடித்த பிஸ்கெட் போடவேண்டும். ஒரு சில தெருநாய்கள் பிஸ்கெட் சாப்பிடாது, பிரியாணிதான் சாப்பிடும். அந்த நாய்க்கு பிடித்தாற்போல சமைத்து கொடுக்கவேண்டும், அப்போதுதான் அது கத்தாமல் இருக்கும். ஒரு வீட்டுக்கே இப்படி என்றால், ஒரு நாட்டை கொடுத்துள்ளீர்கள். சிறுது காலஅவகாசம் கொடுங்கள். புதிய அரசு வேண்டும், மாற்றம் வேண்டும் என்று கேட்கிறீர்கள். மாற்றம் வந்துவிட்டது, அதற்கு கொஞ்சம் அவகாசம் கொடுக்கவேண்டாமா? என்று ராகவா லாரன்ஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியிருந்தார்.

கேள்வி கேட்கும் மக்களை, வாக்களித்த மக்களை தெருநாய்கள் என்பதா என்று இயக்குநர் சேரன் தனது X பக்கத்தில் கட்டமான பதிலை அளித்துள்ளார். "எவ்வளவு அறிவுப்பூர்வமான விளக்கம் லாரன்ஸ்... உங்க சித்தாந்தத்தில் மக்களை நீங்கள் தெருநாயாக சித்தரிப்பதையும் , பிஸ்கட்டும் பிரியாணியும் போட்டு மக்களை குறைக்கவிடாமல் பார்த்துக்கொள்ளனும் எனக்கூறி ஒரு வாக்காளனின் உணர்வை கேவலப்படுத்தும் உங்கள் பேச்சை வன்மையாக கண்டிக்கிறேன்.. மக்களின் எதிர்ப்பு குரல்களுக்கு ஏதாவது போட்டு வாயை மூடவேண்டும் என நீங்கள் சொல்வதில் உங்கள் அரசியல் பயணம் எதை நோக்கி செல்கிறது என புரிந்துவிட்டது.. இதுவரை உங்களிடம் இருந்ததாக கருதப்பட்ட மனிதாபிமானத்தின் மீது சந்தேகம் கொள்ளச்செய்கிறது உங்கள் பேச்சு.. ஆனால் உங்களுக்கும் இந்த மக்கள் ஓட்டு போடுவார்கள்.. கவலை வேண்டாம்.. இப்படிக்கு.. பிஸ்கட்டு பிரியாணிக்காக கையேந்தி நிற்காத மக்களில் ஒருவன்.." என்று அதற்கு பதிலளித்துள்ளார். மேலும், ராகவா லாரன்ஸின் இந்த கருத்து பதிவு சமூக வலைத்தளத்தில் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.