மாவட்டம்

களை இழந்து காணப்பட்ட காசிமேடு மீன் மார்க்கெட் ...

தை பூசத்தை முன்னிட்டு காசிமேடு மீன்பிடி ஏலக்கூடம் களை இழந்து காணப்பட்டது.

Malaimurasu Seithigal TV

சென்னை | காசிமேட்டில் மீன்களை வாங்க பொதுமக்கள் பெரிதும் ஆர்வம் காட்டவில்லை நள்ளிரவு இரண்டு மணி முதற்கொண்டு ஏலமுறையில் தொடங்கும்  இந்த வியாபாரத்தில் சிறு பெரு மற்றும்  சுட்றுவட்டார வியாபாரிகள் கலந்து கொள்வர்.

பொதுவாக ஞாயிற்று கிழமை என்றாலே கூட்டத்துடன் காணப்படும் காசிமேடு ஏலக்கூடமானது இன்று தை பூசம் என்பதால் குறைவாக காணப்பட்டது. அதே அளவு குறைந்த அளவிலான விசைப்படகுகளும் விற்பனைக்கு கரைக்கு திரும்பின. கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் மீன்களின் விலை குறைந்தே காணப்பட்டது.