மாவட்டம்

கிலோ கணக்கில் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள்...!

Malaimurasu Seithigal TV

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை  பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக விராலிமலை காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் விராலிமலை காவல் உதவி ஆய்வாளர் கோவிந்தராஜன் தலைமையிலான காவல் நிலைய அதிகாரிகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது விற்பனைக்காக பதிக்கி வைத்திருந்த 82 கிலோ புகையிலை பொருட்களை காவல்துறையினர் கைப்பற்றினர்.

மேலும் விராலிமலையைச் சேர்ந்த பரமசிவம்(32) என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் மணப்பாறையை சேர்ந்த ரீகன் பிரபு என்பவர் தப்பி ஓடினார். தப்பி ஓடிய அவரை காவல்துறையினர் தற்போது தேடி வருகின்றனர்.