school girl and school 
மாவட்டம்

"பள்ளியிலுமா தீண்டாமை" - அறிவுரை சொல்ல வேண்டிய ஆசிரியர்களே.. பிற்போக்குத்தனமாக இப்படி செய்யலாமா?

இந்த நிலையில் முழு ஆண்டு தேர்வு நடைபெற்று வருவதால் , பள்ளிக்கு சென்ற மாணவியை தீட்டாக

Anbarasan

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே உள்ள, செங்குட்டை பாளையம் கிராமத்தில் செயல்பட்டு வரும் சுவாமி சிப்பவாணந்த மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளியில், 8ம் வகுப்பு பயின்று வரும் பட்டியலின மாணவி பூப்படைந்துள்ளார். இந்த நிலையில் முழு ஆண்டு தேர்வு நடைபெற்று வருவதால் , பள்ளிக்கு சென்ற மாணவியை தீட்டாக கருதி படியில் தனியாக, அமர வைத்து (ஏப்ரல் 4 மற்றும் ஏப்ரல் 7) ஆம் தேதி அறிவியல் தேர்வும் (ஏப்ரல் 09) ஆம் தேதி சமூக அறிவியல் தேர்வுகளை பள்ளி நிர்வாகம் எழுத வைத்துள்ளனர்.

இதனை கண்டு தனது தாய் பதறி துடித்து கேள்வி எழுப்பியுள்ளார், "இங்கு அப்படி தான் நடக்கும்" நீங்கள் வேண்டுமென்றால் வேறு பள்ளியில் சேர்த்துக்கொள்ளுங்கள்" எனக் தெரிவித்ததாக கூறப்படுகிறது எனவே பள்ளி நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மக்கள் விடுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளரும், பாதிக்கப்பட்ட சிறுமியின் தாத்தாவுமான, வி. தம்பு அவர்கள் கொடுத்த பேட்டியில் , கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா, வடலூர் பஞ்சாயத்து, செங்குட்டை பாளையம் கிராமத்தில், "சுவாமி சிட்டவானந்தா வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி" செயல்பட்டு வருகிறது.

இப்பள்ளியில் எனது பேத்தி குறிப்பிட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர் 8ம் வகுப்பு பயின்று வருகிறார், அவர் பூப்படைந்த நிலையில் முழு ஆண்டு தேர்வு நடைபெற்று வருவதால் எனது பேத்தியை, முழு ஆண்டு தேர்வுக்கு பள்ளிக்கு அனுப்பினோம். அங்கிருந்து ஆசிரியர்கள் எனது பேத்தியை, பள்ளியின் உள்ளே அனுமதிக்காமல், வாசற்படியில் அமர வைத்து தேர்வு எழுத வைத்தார்கள், இது எங்களுக்கு மிகவும் மன வேதனையை ஏற்படுத்திருக்கிறது. இது சம்பந்தமாக பொள்ளாச்சி ஆட்சியர் அவர்களிடம் இப்போது மனு கொடுக்க வந்துள்ளோம். மேற்கண்ட பள்ளி நிர்வாகத்தின் மீது மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்