மாவட்டம்

பேருந்து எரிந்து இராணுவ வீரர் உட்பட இரண்டு பேர் பலி...

தேசிய நெடுஞ்சாலையில் கர்நாடகா பேருந்து மீது இரு சக்கர வாகனம் மோதியதில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் இராணுவ வீரர் உட்பட இரண்டு பேர் உயிரிழந்தனர்.

Malaimurasu Seithigal TV

கிருஷ்ணகிரி | ஓசூர் அருகே உள்ள ஒட்டுர் பகுதியை சேர்ந்த இராணுவ வீரர் சுந்தரேசன், அதே பகுதியை சேர்ந்த கணேசன் என்பவர் கிருஷ்ணகிரி நோக்கி இரண்டு சக்கர வாகனத்தில் வரும் போது பெங்களூரு வில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்து கொண்டிருந்த கர்நாடகா மாநில அரசு பேருந்து மீது அரசு மருத்துவக் கல்லூரி எதிரில் மோதியது.

இதில் பேருந்து தீப்பிடித்து எரிந்தது. இரு சக்கர வாகனத்தில் வந்த இராணுவ வீரர் சுந்தரேசன், விவசாயி கணேசன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயைக் அணைத்தனர்.

பேருந்தில் இருந்து உடனடியாக பயணிகள் கீழே இறக்கி விடப் பட்டனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்க பட்டது. இந்த விபத்து காரணமாக கிருஷ்ணகிரி பெங்களூரு செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து குருபரபள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.