வேலூர் | மாநகர் விருபாட்சிபுரம் குளத்தங்கரையில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த அருள் மிகு ஸ்ரீ வலம்புரி விநாயகர் ஆலையத்தில் அமைந்துள்ள வலம்புரி வினாயகர், முருகபெருமான் வள்ளி தெய்வானை, மஹா விஷ்ணு, துர்கை ஆகிய ஸ்வாமிகளுக்கு பூஜை நடந்தது.
பல்வேறு புன்னிய நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை கலசங்களில் வைத்து யாக சாலையில் 8 கால பூஜைகள் செய்து வேத மந்திரங்கள் முழங்க மேளதாளங்களுடன் கலசங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஆலய விமான கோபுரத்தின் மீது உள்ள கலசத்தின் மீது புனித நீரை ஊற்றி மகாகும்பாபிஷேகமானது நடைபெற்றது.
பின்னர் புனித நீரானது பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. பின்பு விநாயகருக்கு தீபாராதனைகள் செய்ப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு விநாயகரை வழிபட்டுச் சென்றனர்.
மேலும் படிக்க | தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்...!