மாவட்டம்

திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்...

கன்னியாகுமரியில் உள்ள திற்பரப்பு அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.

Malaimurasu Seithigal TV

குமரி | குற்றாலம் என்று அழைக்கபடும் திற்பரப்பு அருவியில் இன்று வாரத்தின் கடைசி  விடுமுறை நாள் என்பதால் காலை முதலே ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.

தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். தற்போது குமரியில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் அருவியில் கொட்டும் தண்ணீரும் குறைந்துள்ளது.

எனினும் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் நீண்ட நேரம் குறைந்த நீரில் நீராடி மகிழ்ந்து வருகின்றனர். அது போல நீச்சல் குளத்தில் நீராடுவது மட்டுமல்லாமல் சிறுவர்களுடன் பூங்காவில் விளையாடி மகிழ்ந்து வருகின்றனர்.

மேலும் அருவியின் மேற்பகுதியில் உள்ள சுற்றுலா படகு துறையிலும் ஏராளமான பயணிகள் குவிந்து , படகு சவாரி செய்து இயற்க்கை அழகை ரசித்தும் வருகின்றனர்,.