சிவகங்கை | காரைக்குடி அருகே தேவகோட்டை ரஸ்தாபகுதியில ஆனந்தா அருங்கொடை ஆன்மிக மையத்தில் தவக்கால தயாரிப்புத் தியானம் நடைபெற்றது. இந்த தியான நிகழ்ச்சி பிப்.24 முதல் 3 நாட்கள் நடைபெற்றன.மாலையில் தியான திருப்பலி நடைபெற்றது.
தேவகோட்டை, கூத்தலுர், அரியக்குடி, ஆவுட பொய்கை, செஞ்சை, மான கிரி, செக்காலை உள்ள இறை மக்கள 2,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சிவகங்கை மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஸ்டீபன் அந்தோணி தலைமை வகித்தார்.
ஐதராபாத் தூய ஆவியானவர் சபை நிறுவனர் கிறிஸ்துராஜ் பேசினார். செஞ்சை பங்கு இறைப்பணியாளர் ஜான்பிரிட்டோ, ஆனந்தா அருங்கொடை ஆன்மிக மைய இயக்குநர் இருதயராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும் படிக்க | கோலாகலமாக நடைபெற்ற பெருமாள் திருக்கல்யாணம்...