மாவட்டம்

இரவு நேரத்தில் நடமாடும் சிறுத்தை... வைரல் சிசிடிவி வீடியோ...

உதகையை அடுத்த எம்.பாலடா பகுதியில் பள்ளி அருகில் சிறுத்தை நடமாடும் சிசிடிவி வீடியோ தற்போது வெளியாகி பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Malaimurasu Seithigal TV

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் உதகை அடுத்துள்ள எம்.பாலடா கல்லக்கொரை கிராமத்தில் அரசு பள்ளி அருகே கோபிநாத் என்பவரின் வீட்டு வளாகத்திற்குள் கடந்த 28.11.2022 அன்றும் நேற்று இரவு சிறுத்தை வந்து நாயை விரட்டும் காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இது அங்குள்ள மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கடந்த திங்கட்கிழமை அன்று 2 நாயை அடித்து இழுத்து சென்றதாக கூறப்படுகிறது. 

இது குறித்து வனத்துறையினர் இப்பகுதியில் சுற்றி திரியும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்த அடர்ந்த வனப்பகுதிக்கு விட  உடனடியாக வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.