மாவட்டம்

காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடி...

ராணிபேட்டையில், வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி, பாதுகாப்பு கோரி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

Malaimurasu Seithigal TV

ராணிப்பேட்டை | அரக்கோணம் அடுத்த சித்தேரி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் இவர் அருந்ததியர் வகுப்பை சார்ந்தவர் தனியார் வெல்டிங் கடையில் பணியாற்றி வருகிறார். தணிக்கை போளூர் பகுதியை சேர்ந்தவர் சாருமதி. இவர் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார்.

இருவரும் பேருந்தில் பயணம் செய்யும் போது ஒருவர் ஒருவரை சந்தித்து ஒரு வருட காலமாக காதலித்து வந்த நிலையில் தற்போது இரு வீட்டாரின் எதிர்ப்பு காரணமாக இருவரும் கடந்த 20 / 11 / 2022 அன்று வீட்டை விட்டு வெளியேறி திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இதனை அடுத்து இருவரது வீட்டாரின் அச்சுறுத்தல் காரணமாக புதுமண கலப்பு திருமணம் செய்த காதல் தம்பதிகளான சந்திரசேகர் மற்றும் சாருமதி ஆகிய இருவரும் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வருகை தந்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என தெரிவித்து கோரிக்கை மனுவினை வழங்கியுள்ளனர்.