மாவட்டம்

மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா....!!!

Malaimurasu Seithigal TV

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. 

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம்.  அதன்படி இன்று கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவில், மீனாட்சியம்மனும், சுந்தரேஸ்வரரும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அதன்பின் நடைபெற்ற சிறப்பு தீபாரதனையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

12 நாட்கள் நடைபெறும் இந்த சித்திரை திருவிழாவில், ஏப்ரல் 30 ஆம் தேதி மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகமும், மே 3 ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத்தேரோட்டமும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.