மதுரை மாநகர் காமராஜபுரம் வடக்குத்தெரு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருடைய மகனான ஹரிஹரசுதன் என்ற 17 வயது சிறுவன் 11 ஆம் வகுப்பு வரை படித்து முடித்த நிலையில் தொடர்ந்து பள்ளிக்கு செல்லாமல் கடந்த ஒரு வருடமாக விட்டிலயே இருந்துவந்துள்ளார். இந்நிலையில் தொடர்ச்சியாக வீட்டில் இருந்தபடி, பப்ஜி, ப்ரீ பயர் போன்ற ஆன்லைன் கேம்கள் விளையாடிபடியே இருந்துள்ளார். தொடர்ச்சியாக விளையாடிக்கொண்டே இருந்த நிலையில் பெற்றோர் விளையாட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். ஆனாலும் ஆன்லைன் கேம்களுக்கு முழுமையாக அடிமையாகியுள்ளார்.
இதன் காரணமாக தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதையடுத்து நேற்றுமுன்தினம் சிறுவனின் பெற்றோர் வீட்டில் இருந்தபோது திடிரென மாடியில் இருந்து அலறல் சத்தம் கேட்டவுடன் மாடிக்கு சென்று பார்த்தபோது சிறுவன் திடீரென வீட்டு மாடியில் இருந்து சிறுவன் ஹரிகரசுதன் தனது செல்போனை உடைத்து நொறுக்கிவிட்டு அருகில் உள்ள மாடியில் நின்று கொண்டிருந்த சிறுவர் ஒருவரை பார்த்து எனது அப்பா அம்மாவை பார்த்துக் கொள் என கூறிவிட்டு மாடியில் இருந்து குதித்துள்ளார்
இதனையடுத்து படுகாயங்களுடன் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துசென்றபோது சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் உயிரிழந்ததாக கூறியுள்ளனர்.
இதனையடுத்து சிறுவனின் உடலானது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உடற்கூறாய்விற்காக வைக்கப்பட்டது.
சிறுவன் தொடர்ந்து செல்போனில் ஆன்லைனில் பப்ஜி, ப்ரீ பயர் விளையாடி கொண்டே இருந்ததால் மன உளைச்சலில் தற்கொலை செய்தாரா? வேறு எதேனும் காரணமா? என்பது குறித்தும் கீரைத்துறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
மதுரையில் அடுத்தடுத்து சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்ளக்கூடிய சம்பவம் அதிகரித்து வருவது மக்களிடையே ஒருவித பதட்டத்தை உருவாக்கிவருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்