மாவட்டம்

வனசங்கரி அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா...

அரண்மனை சமஸ்தான நிர்வாகத்திற்குட்பட்ட வனசங்கரி அம்மன் கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

Malaimurasu Seithigal TV

ராமநாதபுரம் அரண்மனை சமஸ்தான நிர்வாகத்திற்குள்ள  அருள்மிகு ஸ்ரீ வனசங்கரி அம்மன் கோவில்  அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள்  தரிசனம் செய்தனர்.

இராமநாதபுரத்தில் மிகவும் பழமையான கோவில்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ வனசங்கரி அம்மன், பரிவார தெய்வங்களான விநாயகர், பைரவர் சன்னதிகள் புணரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த 1ம் தேதி காலை யாகசாலை பூஜையில் துவங்கியது.

மங்கள இசையுடன் மகா கணபதி ஹோமம், நவகிரகஹோமம், மகாலட்சுமி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து இரண்டு நாட்களாக மூன்று கால பூஜைகள் நடைபெற்ற நிலையில் இன்று காலை நான்காம் கால பூஜை மகா பூர்ணாகுதி  நடைபெற்றது.

அதனை தொடர்ந்து இளைய மன்னர் நாகநாதசேதுபதி முன்னிலையில் சிவாச்சாரியார்கள் மேளதாளங்கள் முழங்க புனித நீர் கும்பங்களுடன் கோவிலில் வலம் வந்து  வனங்கங்கரி அம்மன், விநாயகர், பைரவர் விமானங்களில் உள்ள கலசத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு மகா அபிஷேகமும் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவிற்கு நகரின் பல பகுதிகளிலிருந்து  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம் சமஸ்தான திவான் பழனிவேல்பாண்டியன் தலைமையில் பரம்பரை பூஜகர், சிவசாரியார்கள் மனோகரன், ரமேஷ் கும்பாபிஷேக ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.