மாவட்டம்

மாமிசத்திற்காக காட்டுப்பன்றியைக் கொன்ற வாலிபர் கைது...

Malaimurasu Seithigal TV

தென்காசி | ஆய்க்குடி அருகே உள்ள கம்பளி பகுதியில் கடையநல்லூர் வனசரக அலுவலர்கள் நேற்று இரவு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அங்குள்ள வனப்பகுதியை ஒட்டி உள்ள பகுதியில் ஒரு நபர் மாமிச துண்டுகளை வெட்டிக் கொண்டிருந்துள்ளார்.

அதைப் பார்த்த வனத்துறையினர் அந்த பகுதிக்கு சென்று அவரிடம் விசாரித்தப் போது, வனத்துறையினரை பார்த்த அந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளிக்கவே, சந்தேகம் அடைந்த வனத்துறையினர் அவரை வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரித்துள்ளனர்.

அப்போது அவர் கம்பளி பகுதி சேர்ந்த கண்ணன் என்பவரது மகன் சுரேஷ் (வயது 20) என்பதும், அவர் வெட்டிக் கொண்டிருந்த மாமிச துண்டானது காட்டுப்பன்றி என்பதும், அந்தக் காட்டுப் பன்றியை அவர் கன்னி வைத்து பிடித்து மாமிசத்திற்காக வெட்டிக் கொண்டிருப்பதும் தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து, அவரை கைது செய்த வனத்துறையினர் அவருக்கு அபராதம் விதித்து அவர் மீது வேறு ஏதேனும் வேட்டையாடுதல் வழக்கு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், இது போன்ற வனவிலங்கு வேட்டையில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.