மாவட்டம்

பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்த போது ஒருவர் கைது...

வெளிமாவட்டங்களில் இருந்து வாகனம் மூலம் விற்பனை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பேரூராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Malaimurasu Seithigal TV

விழுப்புரம் | மரக்காணம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனை நடைபெறுவதாக மரக்காணம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலை எடுத்து மரக்காணம் பேரூராட்சி நிர்வாக அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது வெளிமாவட்டங்களில் இருந்து ஆட்டோ மூலம் கடைகளுக்கு விற்பனை செய்த நபர்களை மடக்கிப்பிடித்த பேரூராட்சி அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, அவர்கள் ஆட்டோவில் வைத்திருந்த பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து அவர்களிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.