மாவட்டம்

காட்டுத்தீயைத் தடுக்கும் பணியில் மும்முரம்... வனத்துறையினர் அதிரடி ...

வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்படுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் வனத்துறையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

Malaimurasu Seithigal TV

கோவை | மேட்டுப்பாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புல்வெளிகளை அகற்றி தீ தடுப்புக் கோடு அமைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக மார்ச் மாதம் முதல் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் இதனை ஒட்டி வனப்பகுதியில் காட்டுத்தீ பரவுவதை தடுக்க மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலை பகுதியில் இடத்திற்கு ஏற்ற வகையில் 3 மீட்டர் நீளம் முதல் 6 மீட்டர் அகலத்தில் செடி கொடிகள் புல்வெளிகளை அகற்றி தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியில் வனத்துறையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

பகுதிவாரியாக அருகிலுள்ள கிராமத்தினரை இணைந்து தீத்தடுப்பு குழுக்கள் அமைக்க உள்ளனர் வனப்பகுதிக்குள் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்வது தடை செய்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் அவ்வழியாக வந்த சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களை நிறுத்தி காட்டுத்தீ குறித்த விழிப்புணர்வு நோட்டீசுகளை வனத்துறையினர் சுற்றுலா பயணிகளிடம் வழங்கினர்.