மாவட்டம்

பால்வியாபாரி தீக்குளிக்க முயற்சி... வீடியோ வைரலானதால் பரபரப்பு...

ஊக்கத்தொகை வழங்காத காரணத்தால் பால் வியாபாரி ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் குறித்து, வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Malaimurasu Seithigal TV

புதுச்சேரி : கே.ஆர். பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ், இவர் புதுச்சேரி புறநகர் பகுதியான திருக்கனூர் எல்லைக்குட்பட்ட கூனிச்சம்பட்டு பால் கொள்முதல் நிலையத்தில் பால் ஊற்றி வருகிறார், இவருக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக முறையாக ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்போது கடந்த சில மாதங்களாக 2 லட்சம் ரூபாய் வரை  ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து இன்று காலை கூனிச்சம்பட்டு பால் கொள்முதல் நிலையத்திற்கு வந்த ராஜேஷ், ஏன் தனக்கு இன்னும் ஊக்கத்தொகை வழங்கவில்லை என முறையிட்டு தான் வைத்திருந்த மண்ணெண்ணெய்யை தன் மீது ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்தார்.

அப்போது அங்கிருந்தவர்கள் ராஜேஷை சமாதானம் செய்து வெளியே அழைத்து சென்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக திருக்கனூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.