மாவட்டம்

மினி மராத்தான் ஓட்டபந்தயம்!! கொடியசைத்து துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்...

Malaimurasu Seithigal TV

திருப்பத்தூரில் பொது சுகாதார துறையின் நூற்றாண்டு விழாவையொட்டி மினி மராத்தான் ஓட்டபந்தயத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது சுகாதார துறையின் நூற்றாண்டு விழாவையொட்டி மினி மராத்தான் ஓட்டபந்தயத்தை மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

ஓட்டப்பந்தயம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி, பேருந்து நிலையம் தாலுக்கா அலுவலகம் புதுப்பட்டை ரோடு உள்ளிட்ட முக்கிய வீதிகளில் சென்று மீண்டும் மாவட்ட ஆட்சியர் இடத்தில் முடிந்தது. 
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினார்.
 இந்நிகழ்வில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி,  மேலும் வருவாய் கோட்டாட்சியர் இலட்சுமி, துணை இயக்குனர் சுகாதார பணிகள் செந்தில், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூரியகுமார், மாவட்ட பால்வளத் தலைவர் இராஜேந்திரன்,மாவட்ட விளையாட்டு அலுவலர் அப்துல்லா வட்டாட்சியர் சிவப்பிரகாசம் உள்ளாட்சி பிரதிநிதிகள்  சுகாதாரத்துறை பணியாளர்கள் பொது மக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.