மாவட்டம்

முனியாண்டி கோயில் பிரியாணி திருவிழா... 

Malaimurasu Seithigal TV

மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற முனியாண்டி கோவில் பிரியாணி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

திருமங்கலம் அருகே உள்ள வடக்கம் பட்டியில் அமைந்துள்ள முனியாண்டி சுவாமி கோவிலில், ஆண்டு தோறும் பிரியாணி திருவிழா நடைபெறுவது வழக்கம்.  அதன்படி இந்த ஆண்டு காப்பு கட்டுடன் தொடங்கிய 88 வது பிரியாணி திருவிழாவில், நேற்று பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். 

அதன்பின் நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.  இதையடுத்து, பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 150 ஆடுகள் மற்றும் 300க்கும் மேற்பட்ட கோழிகள் முனிசுவாமிக்கு பலியிடப்பட்டு, 2 ஆயிரத்து 500 கிலோ பிரியாணி அரிசியில், அசைவ பிரியாணி தயார் செய்யப்பட்டது.  ஜாதி, மத பேதம் இன்றி ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து இந்த பிரியாணிகளை வாங்கி சென்றனர்.