மாவட்டம்

2 - வது நாளாக தர்ணாவில் ஈடுபட்டு வரும் என்.எல்.சி ஒப்பந்த பாதுகாப்பு ஊழியர்கள்...!

Malaimurasu Seithigal TV

நெய்வேலி என்.எல்.சியில், எம்.எஸ்.எஸ் நிறுவனத்தில் தனியார் பாதுகாப்பு ஊழியர்களை நீக்கியதை கண்டித்தும் மீண்டும் பணி வழங்க கோரியும் நெய்வேலி என்.எல்.சி பாதுகாப்பு தலைமை அலுவலகம் முன்பு ஒப்பந்த பாதுகாப்பு ஊழியர்கள் இரண்டாவது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி இந்தியா லிமிடெட் நிறுவனம் உள்ளது. இதில் பாதுகாப்பு பணிக்காக ஒவ்வொரு நிறுவனத்திலும் தனியார் ஒப்பந்த பாதுகாப்பு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் எம்.எஸ்.எஸ் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய பாதுகாப்பு ஊழியர்களின் ஒப்பந்தம் முடிவடைந்ததால் 42 பேர் பணியில் இருந்து நீக்கப்பட்டனர். இதனால் அதில் பணியாற்றிய பாதுகாப்பு ஊழியர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரி அவர்கள், என்.எல்.சி பாதுகாப்பு தலைமை அலுவலகம் முன்பு இரண்டாவது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.